உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனை; ஒரே நாளில் ரூ.20 உயர்வால் அதிர்ச்சி

தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனை; ஒரே நாளில் ரூ.20 உயர்வால் அதிர்ச்சி

பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பகுதி யில், ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு, 20 ரூபாய் உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்துக்கு கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து, சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று, பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். நேற்று வரத்து குறைந்ததால், தக்காளி விலை அதிகரித்தது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, பள்ளிப்பாளையத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி சுந்தரம் கூறியதாவது: கடந்த, இரண்டு வாரமாக, தக்காளி கிலோ, 60 ரூபாய்க்கு விற்றது. முகூர்த்த நாட்கள் முடிந்ததால், இனிமேல் படிப்படியாக தக்காளி விலை குறையும் என, எதிர்பார்த்தோம். ஆனால், நேற்று தக்காளி வரத்து, 30 சதவீதம் குறைந்ததால், கிலோவுக்கு, 20 ரூபாய் விலை அதிகரித்தது. இதனால், ஒரு கிலோ தக்காளி, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை