உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீரராக்கியம் ரயில்வே கேட்டில்குகை பாதை: மக்கள் எதிர்பார்ப்பு

வீரராக்கியம் ரயில்வே கேட்டில்குகை பாதை: மக்கள் எதிர்பார்ப்பு

கரூர்:கரூர் அருகே, ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை அமைத்து தருமாறு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடத்தில், வீரராக்கியத்தில் ரயில்வே கேட் உள்ளது. அதன் வழியாக, கட்டளை, ரெங்கநாபுரம், மாயனுார் கதவணை உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் அந்த பகுதியில், விவசாய நிலங்களும் உள்ளது. திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள, ரயில்வே கேட் வழியாக இரவு நேரங்களில், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலை உள்ளிட்ட, பல்வேறு காரணங்களுக்காக, சென்று வீடு திரும்புவர்களும் அதிகம். அப்போது, ரயில்கள் வருகைக்காக கேட் மூடப்படுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, கரூர்-திருச்சி ரயில்வே வழித் தடத்தில் குகை வழிப்பாதை அமைக்க, ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி