மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
5 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
5 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
5 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
5 hour(s) ago
ஊத்தங்கரை: ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகம் எதிரே நேற்று, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில குழு உறுப்பினர் லெனின் தலைமை வகித்தார்.ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும், 100 நாள் வேலை திட்டத்தை முறையாக அமல்படுத்து; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் சுழற்சி முறையை கைவிட்டு, அட்டை வழங்கிய அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். 100 நாள் வேலை நடக்கும் இடங்களில் பணி-யாளர்களுக்கு அரசின் சட்டப்படி அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தொடர் கோரிக்கையான, 200 நாள் வேலை, 600 ரூபாய் கூலி வழங்க வேண்டும். துாய்மை பணியா-ளர்களை பணி நிரந்தரம் செய்து மாதம், 25,000 சம்பளம் வழங்-குவதை உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago