உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா

அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் - காரக்குப்பம் சாலையில் உள்ள கணேஷ் நகர் அரசமரத்து மகா மாரியம்மன் கோவிலில், 22ம் ஆண்டு ஆடி முதல் வெள்ளிக்கிழமை திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த, 16ல் கணபதி ஹோமம், விரத காப்பு கட்-டுதல், பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் மற்றும் தீபாராதனை ஆகியவை நடந்தது.அரச மரத்தடியில் அமர்ந்துள்ள முத்தாரம்மன், பிரித்தியங்கரா தேவி, வராகி அம்மன், நாகராஜா, நாககன்னி ஆகிய தெய்வங்க-ளுக்கு அபி ேஷக ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது. இதில், பர்கூர் பாரத கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று அம்மனுக்கு பால் அபிேஷகம் செய்தனர். வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது.* கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபி ேஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்-தது. ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் வெள்ளி கவச அலங்காரத்திலும் காட்சியளித்தனர். பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுர மாரியம்மன் கோவிலில், வாழை இலை அலங்காரத்திலும், அங்காளபரமேஸ்-வரி கோவில், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில்களில் அம்ம-னுக்கு அபிேஷகம் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை