உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.23.45 லட்சத்தில் திட்டப்பணிகள் துவக்கம்

ரூ.23.45 லட்சத்தில் திட்டப்பணிகள் துவக்கம்

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி ஒன்றியம் திப்பனப்பள்ளி பஞ்., கும்மனுாரில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2024 - 25ம் ஆண்டு நிதியில், கும்மனுார் கிராமத்தில், 45 அடி அகலம், 45 அடி நீளத்தில், 8.80 லட்சம் ரூபாய் மதிப்பில், கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்படுகிறது. அதேபோல், கும்மனுார் கிராமத்தில், பெய்யப்பன் வீடு முதல் பெருமாள் வீடு வரை, 9.56 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலையும், மாரியப்பன் வீடு முதல் தீர்த்தகிரி வீடுவரை, 5.09 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலையும் என மொத்தம் என, 23.45 லட்சம் ரூபாய் மதிப்பி-லான திட்டப்பணிகளை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலா-ளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், பஞ்., தலைவர் கிருஷ்-ணவேணி கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ