உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் ஊழியரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே சிந்தகம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார், 29; தனியார் நிறுவன ஊழியர். இவரின் மொபைல் போனுக்கு பகுதி நேர வேலை இருப்பதா-கவும், முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறப்பட்-டிருந்தது.இதை நம்பிய குமார், அதில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்குக-ளுக்கு, 13.60 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால், எந்த லாபமும் வரவில்லை. சந்தேகமடைந்தவர் அதிலிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச் ஆப்' என வந்தது. இதுகுறித்து குமார் புகாரின்படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ