உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட துவக்க விழா

ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட துவக்க விழா

ஓசூர்: ஓசூர், இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்-லுாரியில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பாலி-டெக்னிக் கல்லுாரி ஆசிரியர்களுக்கு, 6 நாட்கள் ஆசிரியர் மேம்-பாட்டு திட்ட பயிற்சி துவக்க விழா நடந்தது. பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் மலர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இயக்குனர் சுதாகரன், முதல்வர் பாலசுப்பிரமணியம், இன்ஜினியரிங் கல்லுாரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் ஜெய்சங்கர் வாழ்த்துரை வழங்கினர். கிருஷ்ணகிரி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சாரதா பேசும் போது, ''ஆசிரி-யர்கள் தங்களின் தொழில்நுட்ப திறனை வளர்த்து கொண்டால் தான், மாணவர்களுக்கு அவற்றின் நுணுக்கங்களை கற்றுத்தர முடியும். மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும், புதிய பயிற்சியும் தேவை. மாணவர்களின் மனதை புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஏற்ற வகையில் எளிமை-யாக பாடம் நடத்த வேண்டும். அதற்கு இந்த பயிற்சி மிகுந்த பய-னுள்ளதாக இருக்கும்,'' என்றார். ஏற்பாடுகளை, கருவி மற்றும் அச்சு பொறியியல் துறை தலைவர் ராமச்சந்திரன், எலக்ட்ரானிக்ஸ் ரோபோடிக்ஸ் துறை தலைவர் வீர-மணி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ