உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கெலவரப்பள்ளி அணை நீர்வரத்து சரிவு

கெலவரப்பள்ளி அணை நீர்வரத்து சரிவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்-பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று முன்தினம், 706 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. மழை குறைந்ததால் நேற்று காலை அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக சரிந்து, 588 கன அடியாக குறைந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.16 அடிக்கு நீர் இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 500 கன அடியும், வலது, இடது கால்வாயில் பாசனத்திற்கு, 88 கன அடியும் திறந்து விடப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்ட நீரில் ரசாயனம் அதிகமாக கலந்திருந்ததால், ஆற்றில் ரசாயன நுரை தேங்கி துர்நாற்றம் வீசியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை