உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தம்பதியர் காரில் கடத்தல்: போலீசார் விசாரணை

தம்பதியர் காரில் கடத்தல்: போலீசார் விசாரணை

ஓசூர்: பேரிகை அருகே, கணவன், மனைவி காரில் கடத்தப்பட்டது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பேரிகை அருகே மென்சன்தொட்டியை சேர்ந்தவர் அப்பையா, 45. இவரது மனைவி வரலட்சுமியம்மா, 35. கூலித்தொழிலாளர்கள்; இவர்க-ளது மகன் தருண்குமார், 19, எலுவப்பள்ளியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணியளவில், சிறுமியை அழைத்து கொண்டு தருண்குமார் ஓட்டம் பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் அக்காவான, சூளகிரி அருகே காமன்தொட்டியில் வசிக்கும் மோனிகா, 21, அவரது கணவர் பவன்குமார், 26, ஆகியோர் நேற்று முன்தினம் அதி-காலை, 5:00 மணிக்கு தருண்குமார் வீட்டிற்கு சென்றனர். அங்கி-ருந்த அவரது தந்தை அப்பையா, தாய் வரலட்சுமியம்மா ஆகி-யோரை, மகேந்திரா சைலோ காரில் கடத்தி சென்றனர். இதைய-றிந்த அப்பையாவின் மகள் முனிரத்தினா, 22, பேரிகை போலீசில் புகார் செய்தார். இதனால் அப்பையா, வரலட்சுமி-யம்மா ஆகியோரை, ஓசூர் பகுதியில் இறக்கி விட்டு, மோனிகா, பவன்குமார் தப்பி சென்றனர்.பேரிகை போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ