உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 1,433 கன அடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 1,433 கன அடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து, 1,433 கன அடியாக அதிகரித்துள்ளதால், தென்பெண்ணை ஆற்றில், 1,248 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் அணைக்கு, 483 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், வரத்தான தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறக்கப்பட்டிருந்தது. நேற்று காலை வினாடிக்கு, 1,433 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,248 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 50.50 அடியாக இருந்தது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக நெடுங்கல்லில், 31.40 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், பாரூர், 11, போச்சம்பள்ளி, 9.40, அஞ்செட்டி, 4, கே.ஆர்.பி., அணை, 1.20, ஊத்தங்கரை, 1 என மொத்தம், 58 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை