மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
15 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
15 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
15 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
15 hour(s) ago
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று, 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் சரயு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பல்வேறு துறைகளின் சார்பில், 42 பயனாளிகளுக்கு, 45.24 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 525 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில்,எஸ்.பி., தங்கதுரை, காங்., - எம்.பி., கோபிநாத், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஏ.டி.எஸ்.பி., சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.* மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, தேசியக்கொடியை ஏற்றினார். குடும்ப நல நீதிபதி நாகராஜன், சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சாமுவேல் பெஞ்ஜமின், சார்பு நீதிபதி மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.* கிருஷ்ணகிரி நகராட்சி வளாகத்தில், நகர மன்ற தலைவர் பரிதா நவாப் தேசியக்கொடியை ஏற்றி, துாய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.* கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லுாரி, கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, போத்தாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.* கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், நகர, ஒன்றிய இந்து முன்னணி சார்பில், மாவட்ட தலைவர் கலைகோபி தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.* ஓசூர் மாநகராட்சி வளாகத்தில், மாநகர மேயர் சத்யா, தேசியக்கொடியை ஏற்றினார். கமிஷனர் ஸ்ரீகாந்த், துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதாரக் குழுத்தலைவர் மாதேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.*ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தேசியக்கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago