உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் மாயம்

வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் மாயம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சேவகானப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி அனிதா, 24. கடந்த, 6 காலை, 10:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தாய் ராதிகா, 40, பாகலுார் போலீசில் கொடுத்த புகாரில், பேரிகை அருகே கொரகுறுக்கியை சேர்ந்த சேத்தன்குமார், 20, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்-டுள்ளார். போலீசார் அனிதாவை தேடி வருகின்றனர்.பாகலுார் அருகே கர்னப்பள்ளியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகள் திவ்யா, 23. கடந்த, 8 மதியம், 3:00 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் மாயமானார். அவரது த்நதை கொடுத்த புகார்படி, பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் திப்பு கோலா. இவரது மனைவி லலிதா கோலா, 22. இவர்களுக்கு, 6 மாத பெண் குழந்தை உள்-ளது. சூளகிரி அருகே கொல்லப்பள்ளியில் தங்கியுள்ளனர். கடந்த, 2 காலை, 10:00 மணிக்கு வீட்டில் இருந்து குழந்தை-யுடன் வெளியே சென்ற லலிதா கோலா மாயமானார். அவரது கணவர் சூளகிரி போலீசில் கொடுத்த புகாரில், கொல்லப்பள்-ளியில் வசிக்கும், அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜேஸ்ரீ, 24, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்-றனர்.தளி அருகே கக்கதாசம் பகுதியில் வசிப்பவர் நீல்கமல் விஷன்வ், 39. தனியார் பால் பண்ணையில் மேலாளராக உள்ளார்; கடந்த, 7 காலை, 9:45 மணிக்கு வீட்டில் இருந்து பால் பண்ணைக்கு சென்-றவர் மாயமானார். அவரது இரண்டாவது மனைவி சுனந்தா, 39, கொடுத்த புகார்படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.தளி பி.டி.ஓ., அலுவலகம் பின்புறம் உள்ள எஸ்.ஆர்., நகரை சேர்ந்தவர் முருகேஷ்பாபு, 48. தனியார் நிறுவன ஊழியர்; கடந்த, 7 காலை, 7:30 மணிக்கு வெளியே சென்றவர் மாயமானார். அவ-ரது மகன் ரவிக்குமார், 21, கொடுத்த புகார்படி, தளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி