உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளியில் காய்கறி தோட்டம்

அரசு பள்ளியில் காய்கறி தோட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனுார் அரசு தோட்டக்கலைக் கல்லுாரி மாணவர்கள், பூச்சியியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் திலகம் தலைமையில், காவேரிப்பட்டணம் அருகே ஜகதாப் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்றனர். அங்கு, வீட்டு காய்கறி மாதிரி தோட்டங்கள் அமைப்பது குறித்து, மாணவ, மாணவியருக்கு செயல்விளக்கம் அளித்து, தோட்டங்களை அமைத்தனர். இதில், கத்தரி, கீரை வகைகள், வெண்டைக்காய், தக்காளி, கொத்தமல்லி, பாகற்காய், பீர்க்கங்காய் போன்ற நாட்டு காய்கறி வகை செடிகளை நட்டனர். மேலும், காய்கறிகளை அறுவடை செய்து, பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு மையத்திற்கு கொடுத்து, சத்தான உணவு வழங்க அறிவுரை வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகுமார் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி