உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அமுல் பால் கொள்முதல் துவக்கம்

அமுல் பால் கொள்முதல் துவக்கம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, என்.தட்டக்கல்லில் நாகரசம்பட்டி சாலை மற்றும் போச்சம்பள்ளி சிப்காட் அருகில், 'அமுல் கால்நடை தீவனம்' என்ற பெயரில், அமுல் பால் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பால் கொள்முதலை துவங்கி விட்டது.பால் விற்பனையாளர்கள் கூறுகையில், 'அமுல் தீவனம் கம்பெனியில் இருந்து பால் கொள்முதல் செய்கின்றனர். லிட்டருக்கு, 37 ரூபாய் கொடுக்கின்றனர். ஆவின் மற்ற தனியார் பால் நிறுவனங்கள் கூட இந்த விலை தருவதில்லை.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10,000 லிட்டர் கொள்முதல் செய்கின்றனர். நிறுவனத்தில் பால் பதப்படுத்தும் இயந்திரங்கள் உள்ளன. தீபாவளிக்குள் 5 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ