ஈரோடு,: ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின், 'மனிதம்' சமூக அமைப்பின் சார்பில், உலக குருதியாளர் தினத்தை முன்னிட்டு, மினி மாரத்தான் போட்டி, ரத்த தான முகாம் நடந்தது.இதன்படி ஈரோடு வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் நடந்த, 15 வயது மேற்பட்டோருக்கான இருபாலர் மாரத்தான் போட்டிகளை, ஈரோடு டி.எஸ்.பி., ஜெய்சிங், எழுத்தாளரும், பேச்சாளருமான ஈரோடு கதிர் தொடங்கி வைத்தனர்.இரண்டாம் நிகழ்வாக நந்தாவின் 'உயிர்த்துளி' அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம், நந்தா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில், கதிர் துவக்கி வைத்தார். இதில் நந்தா கல்வி நிறுவனங்களின் மாணவர், பேராசிரியர்கள் என, 15௦க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். மாரத்தான் ஓட்டத்தில் முதல், 10 இடங்களை பிடித்தவர்களுக்கு, டி.எஸ்.பி., ஜெய்சிங், ஈரோடு கதிர் பரிசு வழங்கி பாராட்டினர்.வெற்றி பெற்றவர்களுக்கு, ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி. முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் பாராட்டு தெரிவித்தனர்.இந்நிகழ்வுகளுக்கு சிறப்பான ஏற்பாடு செய்த பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகுபதி, பிசியொதெரபி கல்லுாரி முதல்வர் மணிவண்ணன், உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பிற கல்வி நிறுவனங்களின் முதல்வர், நிர்வாக அலுவலர்கள் பாராட்டி வாழ்த்தினர்.