உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சுகாதாரமற்ற நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சுகாதாரமற்ற நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், நெடுங்கல் பஞ்., உட்பட்ட, ஜெய்னுார் கிராமத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ள-ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதற்கு தென்பெண்ணை ஆற்றில் உள்ள நெடுங்கல் தடுப்ப-ணையில் உறைகிணறு அமைத்து அதன் மூலம் குடி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த, ௫ ஆண்டுகளுக்கு மேலாக இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்-தாமல் உள்ளதால், இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்தி அதன் மூலம் குடிநீர் வினியோகிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை