உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டதிம்மனல்லி பஞ்., முத்தம்பட்டி கிராமத்தில், கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கவில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராயக்கோட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் அப்பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனால், பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி