| ADDED : மார் 25, 2024 01:00 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், புனித இஞ்ஞியாசியார் ஆலயத்தில்,குருத்தோலை ஞாயிறு தினம் கடைபிடிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி -பழையபேட்டையிலுள்ள புனித இஞ்ஞியாசியார் ஆலயத்திலிருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் நேற்று, 'உன்னதங்களின் ஒசாண்ணா' என்ற பாடலை பாடியபடி குருத்தோலையை ஏந்திக்கொண்டு, காந்திசிலை, தர்மராஜா கோவில் தெரு வழியாக புனித பாத்திமா அன்னை ஆலயத்தை வந்தடைந்தனர். அங்கு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. இதேபோல், ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, கந்திகுப்பம், எலத்தகிரி என, மாவட்டம் முழுவதும் உள்ள, அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலிகள் நடந்தன.* ஊத்தங்கரை புனித அந்தோணியார் ஆலயத்தில், குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலம் நேற்று நடந்தது. ஏராளமான கிருஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி, ஒசாண்ணா பாடலை பாடியபடி பவனி வந்தனர். பங்கு தந்தை மரியதாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அருட்தந்தை பிரபாகர், போதகர் வில்லியம் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.