உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை இல்லை பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை இல்லை பொதுமக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி:மத்துார் அருகே, சீரான குடிநீர் வழங்காத, பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது வாலிப்பட்டி பஞ்., இப்பகுதியில் உள்ள பெரமனுார் கிராமத்திற்கு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கடந்த, 2 மாதங்களாக சீராக வினியோகம் செய்யப்படவில்லை. கடந்த, 15 நாட்களாக சுத்தமாக குடிநீர் தரவில்லை. இது குறித்து புகார் தெரிவித்தும், பஞ்., தலைவர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென கூறி, நேற்று காலை, 9:00 மணியளவில், காலி குடங்களுடன் திரண்ட அப்பகுதி மக்கள், வேலாவல்லி - மத்துார் சாலையில், அரசு பஸ்சை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து அங்கு வந்த பஞ்., தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் மறியலில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பஞ்., தலைவர் பரந்தாமன் சமாதானப்பேச்சு நடத்தினார். மேலும் குடிநீர் பிரச்னை ஓரிரு நாளில் தீர்க்கப்படும் என, மத்துார் பி.டி.ஓ., உறுதியளித்துள்ளார் என கூறியதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை