உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இருதரப்பினர் இடையே தகராறு மாணவன் உட்பட 4 பேர் கைது

இருதரப்பினர் இடையே தகராறு மாணவன் உட்பட 4 பேர் கைது

தளி,தளி அடுத்த பீமசந்திரத்தை சேர்ந்தவர் ராமாரெட்டி, 72, விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சீனிவாஸ்ரெட்டி, 53, என்பவருக்கும் சொத்து பிரச்னை உள்ளது. இது தொடர்பாக, ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.சீனிவாஸ்ரெட்டியின் உறவினரான சுமித்ரா, 55, என்பவர், பிரச்னைக்குரிய நிலத்தில் புதிய வீட்டை கட்டி வருகிறார். அது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த, 1ம் தேதி மதியம், 2:30 மணிக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீனிவாஸ்ரெட்டி தரப்பினர், ராமாரெட்டி மற்றும் அவரது உறவினர் சீனிவாசரெட்டி, 65, என்பவரையும் தாக்கியதாக, தளி போலீசில் ராமாரெட்டி மனைவி சுனந்தா, 65, புகார் செய்தார். அதன்படி, சீனிவாஸ்ரெட்டி, நரசிம்மரெட்டி, 38, சுமித்ரா, 55, மற்றும் கர்நாடகா மாநிலம், பெங்களூரு தனியார் கல்லுாரியில், எம்.பி.ஏ., 2ம் ஆண்டு படிக்கும், தளி அருகே நாகசந்திரத்தை சேர்ந்த குமார், 23, ஆகிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதில், சுமித்ரா, குமாரை ஜாமினில் விடுவித்தனர். அதேபோல், குமார் கொடுத்த புகார்படி, ராமாரெட்டி, சீனிவாசரெட்டி மீது, தளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை