கிருஷ்ணகிரி: களிமண் அகல்விளக்கிற்கு வரவேற்பு குறைந்துள்ளதால், வாழ்-வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.கார்த்திகை மாதம் என்றாலே, நம் நினைவுக்கு வருவது தீப வழி-பாடுதான். பொதுவாக அனைத்து மாதங்களிலும் தீபம் ஏற்றி வழி-பட்டாலும், கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு. கார்த்திகை மாதம், முருகன், ஐயப்பன், சிவன் என முக்-கியதெய்வங்களை வழிபடும் சிறப்பு வாய்ந்த மாதம். இந்தாண்டு கார்த்திகை தீபதிருநாள் வரும் டிச., 3ல் வருகிறது. கிருஷ்ணகிரி பழையபேட்டை திருநீலகண்டர் தெருவில், கார்த்திகை தீபத்திற்காக கடந்த ஒரு வாரமாக அகல் விளக்கு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து, அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலாளி தண்டபாணி, 40, கூறியதாவது: கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு, 50 பேர் அகல் விளக்கு தயாரித்-தனர். ஆனால், காலப்போக்கில் இயந்திரங்களால் தயாரிக்கும் அகல் விளக்கின் மோகம் அதிகரித்ததால், களிமண் அகல் விளக்-கிற்கு வரவேற்பு குறைந்து விட்டது. முன்பு, 50 மூட்டை களிமண் அகல்விளக்கு விற்ற நிலையில், தற்போது, 5 மூட்டை கூட விற்ப-னையாவதில்லை. அதனால் தற்போது, 2 குடும்பங்கள் மட்டுமே அகல் விளக்கை தயாரிக்கின்றனர். இதனால், அரசு எங்-களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லதுஎங்களுக்கு மாற்றுவேலை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.