| ADDED : ஜூலை 05, 2024 12:03 AM
ஓசூர்: கெலமங்கலத்தில் கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு, 500க்கும் மேற்பட்டோர் கைத்தறி நெசவு செய்தனர். இதனால், அப்பகு-தியில் கிராம மக்களின் வளர்ச்சிக்காக காதி கதர் கிராம வளர்ச்சி வாரியம் சார்பில், கட்டடம் கட்டப்பட்டு அதில், நெசவு தொழி-லுக்கு தேவையான நுால்கள் வழங்கப்பட்டு, நெசவாளர்கள் உற்-பத்தி செய்யும் ஆடைகள் கொள்முதல் செய்யப்பட்டது. நாள-டைவில் நெசவு தொழில் நலிவடைந்ததால், காதி கதர் வாரியத்-திற்கு சொந்தமான கட்டடம் பயனின்றி மூடப்பட்டு பாழடைந்-தது. நேற்று, டவுன் பஞ்., நிர்வாகம் அந்த கட்டடத்தை பொக்லைன் மூலம் இடித்தனர். இதையறிந்த சேலத்திலுள்ள கதர் வாரிய உதவி இயக்குனர் சந்-திரசேகரன், நேரில் வந்து, தங்கள் துறைக்கு சொந்தமான கட்ட-டத்தை அனுமதியின்றி எதற்கு இடிக்கப்பட்டது என டவுன் பஞ்., நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டார். இதற்கு டவுன் பஞ்., நிர்வா-கத்தினர், அந்த கட்டடத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதால் இடித்தோம் என தெரிவித்துள்ளனர்.இது குறித்து அதிகாரிகள் புகார் படி, கெலமங்கலம் போலீசார் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.