உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்

ஓசூரில் பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தனியார் அமைப்பு சார்பில், மரம் நடுதல் மற்றும் பசுமை பாதுகாப்பை வலியுறுத்தி, மக்க-ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுமை மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. ஓசூர் மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்டல் முன் துவங்கிய மாரத்தான் போட்டியை, மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஓசூர் கண்காணிப்பாளர் பூபதி கொடி-யசைத்து துவக்கி வைத்தார். 4 கி.மீ., துார இந்த மாரத்தான் போட்டியில், நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.வாலிபர் சோமசேகர் என்பவர், 15 நிமிடம், 26 வினாடிகளில், 4 கி.மீ., துாரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். 16 நிமிடம், 10 வினாடிகளில் இலக்கை அடைந்த ஹரி 2ம் இடமும், 16 நிமி-டங்கள், 31 வினாடிகளில் இலக்கை கடந்த அபிலாஷ், 3ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்-பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ