உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெயரளவிற்கு நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தால் எந்த பயனும் இல்லை

பெயரளவிற்கு நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தால் எந்த பயனும் இல்லை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், விவசாயிகளின் பல கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளிப்பதே இல்லை. மாறாக கேள்விகளை கேட்பதில் மட்டுமே முனைப்பு காட்டுகின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:ஒரு சில பிரச்னைகளை, 10 ஆண்டுகளானாலும், அதிகாரிகள் தீர்ப்பதில்லை. பல முறை மனு அளித்தாலும் கண்டுகொள்வதில்லை. பட்டா தொடர்பான கேள்வி கேட்டால், அது தனிநபர் பிரச்னை. விவசாயிகள் கூட்டத்தில் இதற்கு பதில் அளிக்க முடியாது என பதில் அளிக்கின்றனர். இதனால் பல விவசாயிகள் கேள்வி கேட்கவே தயக்கம் காட்டுகின்றனர். பெயரளவிற்கு நடத்தப்படும் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தால் எந்த பயனும் இல்லை.விவசாயம் பொய்த்து போனால் நாடே ஸ்தம்பித்துவிடும். மழையின்மை, வெப்பம், கடும் பனி, பலத்த மழை போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகே, விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து பொருட்களை விளைவிக்கின்றனர். அப்படிப்பட்ட விவசாயிகளின் அடிப்படை பிரச்னைகளை மாவட்ட நிர்வாகம் தீர்த்து வைக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி