உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ராஜ கணபதி கோவில் மஹா கும்பாபிஷேகம்

ராஜ கணபதி கோவில் மஹா கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகிலுள்ள அண்ணாமலை புதுார் கிராமத்தில், ராஜ கணபதி, முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம், கொடியேற்றத்துடன் துவங்கி, தென்பெண்ணை ஆற்றிலிருந்து புனித தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் ருத்ர ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. இதையடுத்து, ராஜகணபதி, முத்துமாரியம்மன் சுவாமிக்கு எந்திரம், நவரத்தினம், அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல், கோபுரங்களுக்கு கண் திறப்பு ஆகியவை நடந்தது. நேற்று காலை, திருப்பள்ளி எழுச்சி, சுவாமிகளுக்கு உயிரூட்டுதல், 3ம் கால யாக வேள்வி பூஜை, ராஜகணபதி, முத்துமாரியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் ஆகியவை நடந்து. விழாவில், சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ