உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.100 கோடியில் ஓசூர் ஜி.ஹெச்., கட்டுமான பணி காணொலியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு

ரூ.100 கோடியில் ஓசூர் ஜி.ஹெச்., கட்டுமான பணி காணொலியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு

ஓசூர்: தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்திலிருந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிக்கு, காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து ஓசூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் சரயு, கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., செல்லக்குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், ஆகியோர் முன்னிலை வகித்து கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து, அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ''ஓசூரில் மக்கள் பயன்பெறும் வகையில் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்க, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக, 419 படுக்கை வசதிகளுடன், 22,395 சதுர மீட்டர் பரப்பளவில், 100 கோடி ரூபாய் மதிப்பில், ஓசூர் அரசு மருத்துவமனையை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். 6 தளங்களுடன் அனைத்து வசதிகளுடன் உருவமாகும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, சப் கலெக்டர் பிரியங்கா, மாநகராட்சி துணை மேயர் ஆனந்தைய்யா, நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை