உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த இருவர் கைது

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த இருவர் கைது

ஓசூர்: ஓசூர் டவுன் எஸ்.எஸ்.ஐ., தமிழ்மணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ஓசூர், வலம்புரி செல்வ விநாயகர் கோவில் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற ஓசூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யா, 26 மற்றும் ஓசூர் வி.ஓ.சி., நகரை சேர்ந்த முருகேசன், 34 ஆகிய இருவரும் பொது அமை-திக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசி நின்-றனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறியும் செல்-லவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில், சூர்யா மீது பர்கூர் போலீஸ் ஸ்டேஷ-னிலும், முருகேசன் மீது பர்கூர், சிவகங்கை மாவட்டம், பூவந்தி, திருப்பாச்சி போலீஸ் ஸ்டேஷன்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி