உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவில் நிலம் ஏலம் கிராம மக்கள் எதிர்ப்பு

கோவில் நிலம் ஏலம் கிராம மக்கள் எதிர்ப்பு

பென்னாகரம், பென்னாகரம் அருகே உள்ள ஆதனுாரில் போடி திமிராயசாமி கோவில், கதிரி நரசிம்ம சாமி கோவில் உள்ளது. இவை, ஆதனுார், ரங்காபுரம் பளிஞ்சிரஹள்ளி, பெத்தம்பட்டி, நலப்பரம்பட்டி உள்ளிட்ட, 5 கிராமங்களுக்கு சொந்தமானது. இக்கோவிலுக்கு சுவாமி பெயரில் ஆதனுாரில் தனியாக, 12 ஏக்கர் நிலம் உள்ளது. இதை பராமரித்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, கோவில் பூஜை மற்றும் திருவிழாக்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் அந்த நிலத்தை ஏலம் விட நோட்டீஸ் வினியோகம் செய்தனர். ]இந்நிலையில், கோவில் நிலம் ஏலம் விடுவதை தடுத்து நிறுத்தி, பரம்பரை உரிமையுள்ள, 5 கிராம மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி நேற்று, அதிகாரிகளிடம், கிராம மக்கள், 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், பென்னாகரம் தாசில்தார் சண்முகசுந்தரம், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி ஆர்.டி.ஓ., தலைமையில் இருதரப்பு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை