உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாரூர் அரசு பள்ளியில் உலக மரபு வார விழா

பாரூர் அரசு பள்ளியில் உலக மரபு வார விழா

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அரசு மேல்நிலைப்பள்ளி யில், உலக மரபு வார விழா நடந்தது. தொல்லியல் துறை சார்பில், உலக மரபு வார விழா கடந்த, 19 முதல் வரும், 25 வரை நடக்கிறது. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம் சென்னசந்திரம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாரூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, தொல்லியல் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டன. பாரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர் முரளி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஞானசேகரன், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவை சேர்ந்த பெண்ணேஸ்வரன், நேசராஜ் செல்வம் ஆகியோர், தொல்லியல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர். தற்போது, தமிழக அரசால் அலங்காநல்லுாரில் அமைத்துள்ள ஜல்லிக்கட்டு அருங்காட்சியகத்தில், பாரூர் தலைமை ஆசிரியரால் கண்டெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு நடுகல் மாதிரியை காட்சிப்படுத்தியுள்ளதாகவும், கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மற்றும் கல்வெட்டுகள், 13ம் நுாற்றாண்டை சேர்ந்தவை என்றும், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் விளக்கம் அளித்தார். தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு, கோவில் கல்வெட்டுகளை படி எடுப்பது எப்படி என்றும், அங்குள்ள சிலைகளின் பழமை பற்றியும், தொல்லியல் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை