உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே காரப்பட்டு பகு-தியை சேர்ந்த கஜேந்திரன், 33. 'சிசிடிவி' கேமரா பொருத்தும் வேலை செய்கிறார்; கடந்த, 7ம் தேதி மதியம், 3:00 மணிக்கு, காரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் ஹார்-டுவேர் கடைமுன் தன் ஹீரோ ஹோண்டா பைக்கை நிறுத்தியி-ருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர், பைக்கை திருடி சென்றார். கஜேந்திரன் புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரித்-தனர். இதில், திருப்பத்துார் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த ஜெகன் தீபக், 20, என்பவர் பைக்கை திருடியது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், பைக்கை மீட்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ