உள்ளூர் செய்திகள்

குருபூஜை விழா

சோழவந்தான் : சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கண்மாய் கரையில் குழந்தையானந்த சுவாமி ஜீவசமாதி உள்ளது. இங்கு ஆவணி முதல் வாரத்தில் நடக்கும் குருபூஜை நடந்தது. புனித தீர்த்தம் மற்றும் 21 வகை சிறப்பு அபிஷேகம், மலர்களால் அர்ச்சனை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று(ஆக.,20) சிறப்பு அபிஷேகம், 3 வேளை அன்னதானம், நாளை சிறப்பு பூஜை, ஆக.,22ல் குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் சாதுக்களிடம் மடிப்பிச்சை கேட்டு சாப்பிடும் வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், கிராமமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ