உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மூன்றுமாவடியில் சிக்னல் அமைக்க வழக்கு

மூன்றுமாவடியில் சிக்னல் அமைக்க வழக்கு

மதுரை : மதுரை புதுார் வழக்கறிஞர் சந்திரபோஸ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மூன்றுமாவடியில் அழகர்கோவில் ரோடு, அய்யர்பங்களா, சம்பக்குளம் ரோடுகள் சந்திக்கின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் இல்லை. வாகன நெரிசல் ஏற்படுகிறது. விபத்தில் 2 பேர் பலியாகினர். சிக்னல் அமைக்கக்கோரி போலீஸ் கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: போக்கு வரத்து துணை கமிஷனர் மனுவை பரிசீலித்துஉத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை