| ADDED : ஆக 17, 2024 02:02 AM
மதுரை: மதுரை வலையங்குளம் முத்துப்பாண்டி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர் தாலுகாக்களில் பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்காக அரசு பஞ்சமி நிலம் ஒதுக்கியது.பட்டியலினம் சாராத சில தனிநபர்களால் சட்டத்திற்கு புறம்பாக 103.33 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். பஞ்சமி நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு கலெக்டர், சம்பந்தப்பட்ட தாசில்தார்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்.,13 க்கு ஒத்தி வைத்தது.