| ADDED : ஆக 07, 2024 05:26 AM
உசிலம்பட்டி : தமிழ்நாடு அரசு மாநிலத்தில் கடந்த 2022 ல், சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களைத் தேர்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கியுள்ளது.குற்றங்களை கண்டுபிடித்து விரைவில் கைது செய்தது, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது, சட்டம்- ஒழுங்கைப் பராமரித்தது, விபத்துகளை குறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது என பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்ட உசிலம்பட்டி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.இந்த விருதை போலீஸ் டி.ஜி.பி., சங்கர்ஜிவால் உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்திடம் வழங்கினார். இதையடுத்து உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., க்கள், போலீசாரை சால்வை அணிவித்து பாராட்டினார்.