மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
8 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
8 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
9 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
9 hour(s) ago
மதுரை : 'மதுரையில் உணவு கதிர்வீச்சு மையம் (இர்ரேடியஷன் யூனிட்) அமைக்க வேண்டும்' என வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தினர் சிப்காட் நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜிடம் வலியுறுத்தி உள்ளனர்.பேக்கிங் செய்த உணவுப்பொருட்களை காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் அல்லது எலக்ட்ரான் கற்றைகள் போன்ற அயனியாக்கும் கதிர்வீச்சுக்கு உட்படுத்துவது தான் உணவு கதிர்வீச்சு. உணவு மூலம் பரவும் நோய்களுக்கு காரணமாக நுண்ணுயிரிகளை அழிப்பதன் மூலம் தயாரிப்புகளின் ஆயுளை நீட்டிக்கிறது.பேக்கிங் உட்பகுதியில் முளைப்பதை அல்லது பழுக்க வைப்பதைத் தடுக்கிறது. மேலும் பூச்சிகள் மற்றும் ஊடுருவும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறை இது. வெளிநாடுகளில் இதுபோன்ற உணவுகதிர்வீச்சு மையங்கள் செயல்படுகின்றன. மதுரையில் இம் மையம் அமைக்க வேண்டும் என சிப்காட் நிறுவன நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜிடம் மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு கோரிக்கை விடுத்தார்.அவர் கூறியதாவது:மதுரையில் இருந்து காய்கறி, பழங்கள், உணவுப்பொருட்கள் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமீபகாலமாக உணவு கதிர்வீச்சு செய்யப்பட்ட பேக்கிங்கை ஏற்றுமதி செய்வதற்கு வலியுறுத்துகின்றனர். உணவுப்பொருட்கள் மட்டுமின்றி காட்டன் துணிகள், காட்டன் சட்டைகள், மருத்துவ உபகரணங்களுக்கும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்கின்றனர்.மதுரையில் உணவு கதிர் வீச்சு மையம் அமைந்தால் பேக்கிங் செய்த உணவுப்பொருளை மையத்தில் உள்ள இயந்திரத்தின் வழியே செலுத்தினால் போதும். அவை முழுமையாக கிருமிநீக்கம் செய்யப்பட்டு, உணவின் ஆயுளையும் நீட்டித்து விடும்.மதுரை விமான நிலையம் அருகே இதற்கான மையத்தை அமைக்க வேண்டும்.உணவு, பிளாஸ்டிக், ரப்பர் என தென்மாவட்ட தயாரிப்பாளர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் மதுரையில் 25 மாடி கட்டடத்தில் நிரந்தர காட்சிக்கூடம் அமைக்க வேண்டும். வெளிநாடுகளில் பல மாடி கட்டடத்தில் நிரந்தர காட்சிக்கூடம் வைத்துள்ளதால் ஆர்டர் எடுக்க வருபவர்கள் ஒரே இடத்திற்கு சென்று வேண்டியதைப் பெற முடிகிறது. இதற்காக 10 ஏக்கர் அளவில் இடம் தர தயாராக உள்ளோம் என்றார்.சிப்காட் நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜ் கூறுகையில் மருத்துவ உபகரணங்களுக்கு அதிகளவு கதிர்வீச்சு ( 2லட்சம் கியூரி), உணவுப்பொருட்களுக்கு அதை விட குறைந்த கதிர்வீச்சு (50ஆயிரம் கியூரி) தேவைப்படும். உட்பகுதியில் மருத்துவ உபகரணங்களும், வெளிப்பகுதியில் உணவுப்பொருட்களுக்கும் கதிர்வீச்சு மையம் அமைக்கப்படுகிறது. மதுரையில் இதுபோன்ற மையம் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
8 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago