உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முக்கிய கட்சிகள் இன்று மனுத்தாக்கல்

முக்கிய கட்சிகள் இன்று மனுத்தாக்கல்

மதுரை : மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட முக்கிய கட்சி வேட்பாளர்கள் இன்று(மார்ச் 25) மனுத்தாக்கல் செய்கின்றனர்.மனுத்தாக்கல் மார்ச் 19ல் துவங்கியது. இதுவரை 3 சுயேச்சைகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின் இன்று முக்கிய கட்சிகள் மனுத்தாக்கல் செய்கின்றன. இன்று மதியம் 1:16 மணி வரை பவுர்ணமி திதி உள்ளதால் இந்நேரத்திற்குள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. இன்று காலை 11:00 மணிக்கு காந்தி மியூசியம் அருகே காலை 10:30 மணிக்கு கட்சியினருடன் புறப்பட்டு பா.ஜ., வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் கலெக்டர் அலுவலகம் சென்று மனுத்தாக்கல் செய்கிறார்.அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் காலை 11:30 மணிக்கு கே.கே.நகர் ஆர்ச் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு மனுத்தாக்கல் செய்கிறார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், மதியம் 1:00 மணிக்கு மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளி அருகே கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக புறப்பட்டு மனுத்தாக்கல் செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை