உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பனிமயமாதா சர்ச் திருவிழா பேனர்களை அகற்ற உத்தரவு

பனிமயமாதா சர்ச் திருவிழா பேனர்களை அகற்ற உத்தரவு

மதுரை : துாத்துக்குடி பிடெலிஸ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் 442வது ஆண்டு திருவிழா ஜூலை 26ல் துவங்கியது. ஆக.5ல் நிறைவடைந்தது. அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. திருவிழாவையொட்டி தற்காலிக கடைகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதித்தது. இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. தற்காலிக கடைகள், விளம்பர பிளக்ஸ்களை அகற்றக்கோரி மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: பிளக்ஸ் பேனர்களை 15 நாட்களில் மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். ஆக.,22 ல் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி