மதுரை : தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.* திருநெல்வேலி - எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20666) ஆக., 16ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.* மதுரை - சென்னை 'பாண்டியன்' விரைவு ரயில் ஆக., 14, 15, 16,17ல் செங்கல்பட்டு ரயில்நிலையத்துடன் நிறுத்தப்படும். சென்னை - மதுரை பாண்டியன் ரயில் ஆக.15ல் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9:40க்கு புறப்படும். ஆக. 16, 17 தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து இரவு 10:40க்கு புறப்படும்.* துாத்துக்குடியில் இருந்து ஆக.17 ல் சென்னை புறப்படும் முத்துநகர் ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும்.* ஆக.15, 16, 17 ல் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் நெல்லை விரைவு ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும். ஆக., 16, 17ல் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை ரயில் (12631) செங்கல்பட்டில் இருந்து இரவு 9:10 மணிக்கும், எழும்பூர் - செங்கோட்டை 'பொதிகை' விரைவு ரயில் (12661) செங்கல்பட்டில் இருந்து இரவு 9:40 மணிக்கும், எழும்பூர் - கன்னியாகுமரி விரைவு ரயில் (12633) செங்கல்பட்டில் இருந்து மாலை 6:20 மணிக்கும் புறப்படும். இம்மூன்று ரயில்களும் எழும்பூர், செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.* ஆக., 15, 16ல் செங்கோட்டை - எழும்பூர் 'பொதிகை' விரைவு ரயில் (12662), திருநெல்வேலி - எழும்பூர் விரைவு ரயில் (12632), கன்னியாகுமரி - எழும்பூர் விரைவு ரயில் (12634) செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.* ஆக.,14ல் கன்னியாகுமரி - ஹஜ்ரத் நிஜாமுதின் விரைவு ரயில் (12641) விழுப்புரம், வேலுார், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். பெரம்பூரில் காலை 10:55 மணிக்கு வந்து 11:00 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.* ஆக.,15ல் ஹவுரா - திருச்சி விரைவு ரயில் (12663) பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். பெரம்பூரில் இரவு 8:00 மணிக்கு வந்து 8:05 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.* சென்னை எழும்பூர் - காரைக்கால் விரைவு ரயில் (16175) ஆக., 7 முதல் 17 வரை எழும்பூரில் இருந்து ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக இரவு 10:25 மணிக்கு புறப்படும்.