உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.1.5 கோடியில் அமைத்த புதிய ஷட்டரும் ஒழுகுது சாத்தையாறு அணையில்தான்

ரூ.1.5 கோடியில் அமைத்த புதிய ஷட்டரும் ஒழுகுது சாத்தையாறு அணையில்தான்

பாலமேடு: பாலமேடு சாத்தையாறு அணையில் ரூ.1.5 கோடியில் அமைத்த புதிய ஷட்டர்கள் வழியாகவும் தண்ணீர் வெளியேறுகிறது.கடந்த ஆண்டுகளில் இந்த அணையில் பழுதான ஷட்டர்கள் வழியாக மாதக்கணக்கில் நீர் வீணானதால் அதனை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்தது. இந்த ஷட்டர்களை மாற்ற விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.இதையடுத்து கடந்த மாதம் அணையில் உள்ள 4 ஷட்டர்களை ரூ.1.5 கோடி செலவில் மாற்றும் பணி நடந்து முடிந்தது. தற்போது அணைக்கு நீர்வரத்துப் பகுதியான திண்டுக்கல் சிறுமலையில் தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் அணைக்கு அதிகளவில் வந்த தண்ணீர் ஷட்டர் பகுதி வரை நிரம்பியது. மழையும், அணைக்கு வரத்தும் தொடர்வதால் பழுது பார்த்த புதிய ஷட்டர்கள் வழியாகவும் தண்ணீர் வெளியேறுகிறது.தண்ணீரின் அளவு அதிகரித்தால் வெளியேறும் அளவும் அதிகரிக்கும். எனவே ஷட்டர்களை சோதனை முறையில் இயக்கிப் பார்த்து பாசன நீரை பாதுகாக்க நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ