உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தனது வளர்ச்சிக்காக ஜெயலலிதாவைபா.ஜ., துணைக்கு அழைக்கிறது உதயகுமார் குற்றச்சாட்டு

தனது வளர்ச்சிக்காக ஜெயலலிதாவைபா.ஜ., துணைக்கு அழைக்கிறது உதயகுமார் குற்றச்சாட்டு

பேரையூர், : ''தமிழக மக்களின் ஆதரவு எந்த காலத்திலும் இல்லை என்பதை தெரிந்துதான் பா.ஜ., வளர்ச்சிக்காக ஜெயலலிதாவை துணைக்கு அழைக்கிறது'' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.பேரையூர் தாலுகா டி. குன்னத்துார் அம்மா கோயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர். அவர் பேசியதாவது: தி.மு.க., அரசு மக்களின் வாழ்வாதார ஜீவாதாரம் உரிமைகளை விட்டுக் கொடுக்கிற ஒரு அரசாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவோம் என்ற கேரள அரசு தொடர்ந்து பிரச்னை செய்து கொண்டிருக்கிறது. இதை தி.மு.க., அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனை.ஜெயலலிதாவின் சமூகநீதி கொள்கை, பெண் உரிமைக் கொள்கை போன்றவற்றை மூடி மறைத்து விட்டு உள்நோக்கத்தோடு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவரை ஹிந்துத்வா தலைவர் என பா.ஜ., சொல்வதால் எந்த தாக்கமும் ஏற்படாது. அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும், முகவரி தேடுவதற்காகவும் ஜெயலலிதாவை துணைக்கு அழைத்துக் கொள்வதில் உள்நோக்கம் இருக்கிறது. ஜெயலலிதா அரசியல் செய்து கொண்டிருந்த போது அண்ணாமலை பள்ளி மாணவராக இருந்தார். 'அரசியல் அனுபவம்' என்று பேசுகிறார். தேர்தல் தீர்ப்பில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை மக்கள் அளிப்பார்கள். 3 ஆண்டு காலத்தை வீணடித்து விட்டோமே என அண்ணாமலைக்கு அப்போது புரியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மே 29, 2024 09:12

ஆ தி மு க ஜெயலலிதா ...தமிழக சீனியர் சிடிசனின் கருத்து தமிழக முதல்வர் பொறுப்பில் சில சாதனைகள் செய்துள்ளார். ஆனால் அவரின் கிச்சன் கேபினட் தலைவி தமிழ்நாட்டை வளங்களை சீரழித்தாரே. இந்துக்களின் தெய்வமாக மதிக்கப்படுகின்ற காஞ்சி பெரியவரை சிறையில் தள்ளினார். எத்துணை பேரின் ஈ சி ஆர் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜெயலலிதாவை பற்றி அவரின் இந்து கொள்கையை பற்றி எவர் வேண்டுமானாலும் பேசலாம். உதயகுமார் பயப்படவேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை