உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருச்சி பக்கம் போறீங்களா போக்குவரத்து மாற்றம்

திருச்சி பக்கம் போறீங்களா போக்குவரத்து மாற்றம்

மதுரை, : திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்மலை ரயில்வே பாலம் பழுதடைந்துள்ளது. மதுரை, திண்டுக்கல், தென்மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலுார் வழியாகச் செல்ல வேண்டும்.சென்னை, பெரம்பலுார் மார்க்கத்திலிருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு பெரம்பலுாரிலிருந்து துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல் வழியாகச் செல்ல வேண்டும். இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை நடைமுறையில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ