உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தார்ப்பாய் இல்லா வாகனங்களால் அவதி

தார்ப்பாய் இல்லா வாகனங்களால் அவதி

பேரையூர் : கிராவல் மண், செம்மண், மணல், செங்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள், தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால், பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மண் பறந்து விழுவதால் அவர்கள் நிலைகுலைந்து போகின்றனர்.பேரையூர் தாலுகாவில் அரசு அனுமதி பெற்ற கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. தினசரி நுாற்றுக்கணக்கான லாரிகள், மண், செங்கல் ஏற்றிச் செல்கின்றன. பெரும்பாலான லாரிகள், தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்கின்றன. அதனால் மண் காற்றில் பறந்து பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்ப்பதும், அதனால் அவர்கள் நிலைகுலைந்து போவதும் தினசரி அரங்கேறுகிறது. இந்த வாகனங்களின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை