உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகள் நலனில் தமிழகம் முதலிடம்: கலெக்டர்

மாற்றுத்திறனாளிகள் நலனில் தமிழகம் முதலிடம்: கலெக்டர்

மதுரை: தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மகளிர் மாநாடு, மகளிர் தினம் மாநகராட்சி பூங்கா முருகன் கோயில் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட மகளிரணி தலைவி ராவியத்பேகம் வரவேற்றார். மாநில தலைவர் புஷ்பராஜ், பொதுச் செயலாளர் சொர்க்கம்ராஜா, சட்ட ஆலோசகர் முத்துக்குமார், பல்சுவை பேச்சாளர் மதுரை முத்து, சினிமா தயாரிப்பாளர் விபின், இயக்குனர் குகன், தமிழ் சினிமா நடிகர்கள் சங்க பொதுசெயலாளர் வினோத் உட்பட பலர் பேசினர்.மதுரை கலெக்டர் சங்கீதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ''மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றத்தில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நலவாரியம் அமைத்துள்ளார். மதுரை அரசு ஐ.டி.ஐ.,யில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப படிப்புகள் உதவித்தொகையுடன் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் சில பணிகளை திறம்பட செய்வதில் வல்லவர்கள்'' என்றார். மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை