மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
நாமக்கல்: நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சவுந்தரம் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வைரம், மாவட்ட பொதுச்செயலாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணியை சமூக நலத்துறை, வருவாய்த்துறை வசமே ஒப்படைக்க வேண்டும். செவிலியர்களிடம் தாய்சேய் நலப்பணி, தடுப்பூசி பணிகளை வழங்க வேண்டும். ஆண், பெண் பாலின பாகுபாடின்றி முறையான பதவி உயர்வு அளிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கணினி இயக்குபவர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025