ராசிபுரம்;''ஜாதி, மதம் பாகுபடு பார்க்காத ஆட்சி தான், அ.தி.மு.க., ஆட்சி,'' என வேட்பாளர் ராஹா தமிழ்மணி பிரசாரத்தில் பேசினார்.நாமக்கல் லோக்சபா தொகுதியின், அ.தி.மு.க., வேட்பாளர் ராஹா தமிழ்மணி தேர்தல் பிரசாரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நடனமாடி ஓட்டு சேகரிப்பது, வேளாண் நிலங்களில் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது என, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியை பின்பற்றி பிரசாரம் செய்து வருகிறார்.அதன்படி, ராசிபுரம் நகர் பகுதியில் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:ராசிபுரம் நகர மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை, அ.தி.மு.க., அரசு கொண்டு வந்தது. ஜெயலலிதா ஆட்சியில் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என பாகுபாடின்றி நடத்தப்பட்டனர். ஆனால், இப்போது நடக்கும் ஆட்சி அப்படி இல்லை. ஜாதி வேறுபாடு பார்க்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். உடன், முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் சேர்மனும், நகர செயலாளருமான பாலசுப்ரமணியம், மாவட்ட அவை தலைவர் கந்தசாமி, கட்சி நிர்வாகி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.