உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மலைக்கு செல்லும் முக்கிய சாலை தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு

மலைக்கு செல்லும் முக்கிய சாலை தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு

புதுச்சத்திரம், வல்வில் ஓரி விழாவையொட்டி, மலைக்கு செல்லும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.கொல்லிமலை செம்மேட்டில் உள்ள, வல்வில் ஓரி சிலைக்கு ஆடிப்பெருக்கு விழாவான நாளை (3ல்) பல்வேறு சமூகத்தினர், மலைவாழ் மக்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருவர். காவிரி ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதால், பொது மக்கள் குளிக்கவும், ஆற்றுக்குள் இறங்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால், ஆடிப்பெருக்கு அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், கொல்லிமலைக்கு செல்லும் வழியில் உள்ள புதுச்சத்திரம், புதன்சந்தை, காளப்பநாய்க்கன்பட்டி, சேந்தமங்கலம், முத்துக்காப்பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை