உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மழையால் சாலை வெறிச்

மழையால் சாலை வெறிச்

நாமக்கல் : நாமக்கல் நகர் பகுதியில், நேற்று மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மாலை, 5:00 மணிக்கு திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. அரை மணிநேரம் பெய்த மழையால், சாலைகள் வெறிச்சோடின. இடியுடன் கூடிய மழை பெய்ததால், ஆஞ்சநேயர் கோவில் சாலையில் மின் வெட்டு ஏற்பட்டது. இதனால், 30 நிமிடத்திற்கு பின் மின் இணைப்பு வழங்கப்பட்டது. மழை நின்றபின் வழக்கம்போல் போக்குவரத்து தொடங்கியது. திடீர் மழையால் நகர் பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாமக்கல்லில், நேற்று பெய்த திடீர் மழையால், எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் பிரிவு சாலை வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை