உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.22 லட்சம் பெற்று தந்தது நீதிமன்றம்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.22 லட்சம் பெற்று தந்தது நீதிமன்றம்

நாமக்கல்: இன்சூரன்ஸ் பணம் கேட்டதற்கு பதில் தராத தனியார் நிறு-வனம், இறந்தவரின் மனைவிக்கு, 22 லட்சம் ரூபாயை, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் பெற்றுதந்தது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த பிராந்தகத்தை சேர்ந்த முருகன் மனைவி செல்வி, 45. கடந்த 2019 டிசம்பரில் முருகன், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் இறந்-துள்ளார். இரு சக்கர வாகனத்திற்கு, முருகன் இன்சூரன்ஸ் செய்தி-ருந்ததோடு, அவருக்கும் தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டத்தில், 15 லட்சத்திற்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (ரிலையன்ஸ்) பிரிமியம் செலுத்தியிருந்தார்.கணவரின் இறப்பிற்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்குமாறு செல்வி விண்ணப்பித்துள்ளார். பணம் வழங்காததால் இன்-சூரன்ஸ் நிறுவனம் மீது, 2022 ஜூனில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் செல்வி வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்து நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் கடந்த மார்ச் மாதத்தில் தீர்ப்பு வழங்கினர். அதில், இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவரின் மனைவிக்கு, நான்கு வாரத்-திற்குள் இன்சூரன்ஸ் தொகை, 15 லட்சம், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, ஒரு லட்சத்தை, விபத்து நடந்த நாளிலிருந்து ஆண்டுக்கு, 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என, தீர்ப்பில் உத்தரவிட்டனர்.ஆனால், காப்பீட்டு தொகை, இழப்பீட்டு தொகையை இன்-சூரன்ஸ் நிறுவனம் உரிய காலத்துக்குள் வழங்கவில்லை. இதைய-டுத்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளரை கைது செய்து, தண்டனை வழங்க வேண்டும் என கடந்த ஜூனில் செல்வி மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, செல்-விக்கு பணம் வழங்காவிட்டால் இன்சூரன்ஸ் நிறுவன மேலா-ளரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்படும் என, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் எச்சரிக்கை செய்தது.இந்நிலையில், தீர்ப்புப்படி வழங்க வேண்டிய இன்சூரன்ஸ் தொகை, 15 லட்சம், சேவை குறைபாட்டிற்கான இழப்பீட்டு தொகை, 1 லட்சம் என, 16 லட்சம் ரூபாயை, செல்வியின் கணவர் விபத்தில் இறந்த நாளில் இருந்து, தற்போது வரை ஆண்-டுக்கு, 9 சதவீத வட்டியுடன் சேர்த்து, 22.76 லட்சம் ரூபாய்க்கான 'டிடி'யை இன்சூரன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்-பித்தது.இதையடுத்து, இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட செல்விக்கு, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், 22 லட்சத்து, 76 ஆயிரத்து, 226 ரூபாய்க்கான, 'டிடி'யை வழங்கினார். நீதிமன்ற உறுப்பினர்கள் ரமோலா, லட்சு-மணன், வக்கீல்கள் ராஜு, ராஜவேலு ஆகியோர் உடன் இருந்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை