உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சரக்கு விற்றவர் கைது

சரக்கு விற்றவர் கைது

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியன், மங்களபுரம் அடுத்த ஊத்துப்புளிக்காடு பகுதியில் டாஸ்மாக் சரக்கை வாங்கி, சட்ட விரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று போலீசார் ஊத்துப்புளிக்காடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கிரிசங்கர், 26, டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி, அதிக விலைக்கு விற்பது தெரிந்தது. இதையடுத்து கிரிசங்கரை கைது செய்த மங்களபுரம் போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மது விற்ற 3 பேர் கைது

குமாரபாளையம்: குமாரபாளையம் பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார், சின்னப்பநாயக்கன்பாளையம், ராஜராஜன் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மது விற்றுக்கொண்டிருந்த கணேசன், 40, செல்வம், 41, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து, தலா, 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அதேபோல், பள்ளிப்பாளையம் அருகே, கோவிந்தம்பாளையம் ரயில்வே கேட் பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்த பிரகாஷ், 37, என்பவரை கைது செய்த, போலீசார், 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை