| ADDED : நவ 13, 2025 03:31 AM
குமாரபாளையம்: விதி மீறி செயல்பட்ட, மூன்று சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், ஒரு சாயப்பட்டறைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.குமாரபாளையம் பகுதியில் ஏராளமான சாய ஆலை நிறுவ-னங்கள் இயங்கி வருகின்றன. இதை நம்பி, பல்லாயிரக்கணக்-கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சில சாய ஆலைகள், சட்டவிரோதமாக சுத்திகரிப்பு செய்யாமல் சாயநீரை, நேரடியாக கால்வாய் மூலம் ஆற்றில் கலப்பதால், பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். குமாரபாளையம் பகு-தியில், இரண்டு டையிங் நிறுவனங்கள் சட்ட விரோதமாக இரவில் சாயநீரை சுத்திகரிப்பு செய்யாமல், நேரடியாக கால்வாய் மூலம் காவிரி ஆற்றில் கலப்பதாக அப்பகுதி மக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகாரளித்தனர்.இதையடுத்து, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் செல்வகணபதி தலைமையிலான அதிகாரிகள், கடந்த, இரண்டு நாட்களாக அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, இரண்டு நிறுவனங்களும் சட்டவிரோதமாக சாயநீரை வெளியேற்றி வரு-வது தெரியவந்தது. இதையடுத்து, குமாரபாளையம், ராஜம் தியேட்டர் எதிரே மற்றும் குளத்துக்காடு பகுதியில் என, இரண்டு சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.அதேபோல், சமய சங்கிலி கிராமத்தில் சாயப்பட்டறையை இயக்கி சுத்திகரிக்கப்படாத சாயநீரை காவிரி ஆற்றில் ரகசிய குழாய் மூலம் வெளியேற்றி வந்தது தெரியவந்தது. புகார்படி, அந்த நிறுவனத்திற்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது.